- சத்தீஸ்கர்
- கனகர்
- நக்சலைட்டுகள்
- சோட்டபெட்டியா
- கங்கர்-நாராயண்பூர்
- நாராயன்பூர் மாவட்டம்
- மாவட்ட ரிசர்வ் காவல் படை
காங்கர்: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் காங்கர் நாராயண்பூர் எல்லைக்கு அருகே உள்ள சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்றிய மாவட்ட ரிசர்வ் காவல்படை வீரர்கள் அதை செயலிழக்க வைக்கும்போது, எதிர்பாராத விதமாக கண்ணி வெடி வெடித்து சிதறியது.
இதில் இன்ஸ்பெக்டர் சுக்ராம் வாட்டி(40), கான்ஸ்டபிள் கிருஷ்ணா கோம்ரா(35) மற்றும் கான்ஸ்டபிள் சஞ்சய் கத்பலே(29) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு கான்ஸ்டபிள் பர்மானந்த் கோம்ரா ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
