×

திருப்பூர் ரயில்வே போலீஸ் நிலைய சுரங்க பாலத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பூர், பிப்.26: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் இருந்து புஷ்பா ரவுண்டானா பகுதிக்கு தண்டவாளத்தை கடப்பதற்கு வசதியாக திருப்பூர் ரயில்வே போலீஸ் நிலையம் அருகே சுரங்க நடைபாலம் உள்ளது. ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவிகள், பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பனியன் வர்த்தகர்கள் காலேஜ் ரோடு பகுதிக்கு செல்வதற்கு நடைபாலத்தை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அந்த பாலம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலங்களில் பாலத்தில் அதிகளவு மழை நீர் தேங்கும்.

பின்னர் தண்ணீர் வடியும் நிலையில் மழைநீரில் அடித்து வரும் மண் மற்றும் சகதி ஆகியவை பாலத்தின் அடியில் 1 அடி உயரத்துக்கும் அதிகமாக தேங்கி தற்போது மண் மேடாகி உள்ளது. பாலத்தின் உயரம் குறைந்து நடந்து செல்லும் பொதுமக்கள் குனிந்து கொண்டே செல்லும் நிலை உள்ளது. இந்த பாலப்பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின்போது அள்ளப்படும் மண் மற்றும் கட்டிட கழிவுகளும் இப்பகுதியில் கொட்டப்படுவதால் பாதசாரிகளுக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது:  

இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.  எனவே பொதுமக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கம் வகையில் உள்ள சுரங்க பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupur Railway Police Station ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ