ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் முழுமையாகச் சீரடைந்து இயல்புக்கு நிலைக்குத் திரும்பியதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரான் – அமெரிக்கா போரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வான்வெளி முழுமையாகத் திறக்கப்பட்டது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக கிழக்காசிய நாடுகளில் பதற்றம் நிலவியது. ஈரான் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியத. இதனை தொடர்ந்து கிழக்காசிய நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியது. இதன் காரணமாக அந்த நாடுகளுக்கான விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
தற்போது ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த நிலையில் கிழக்காசிய நாடுகளில் போர் பதற்றம் குறைந்து வான்வெளி முழுமையாகத் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் முழுமையாகச் சீரடைந்து இயல்புக்கு நிலைக்குத் திரும்பியுள்ளது.
