தர்பூசணி விற்பனை அதிகரிப்பு

பொள்ளாச்சி, பிப். 26:  பொள்ளாச்சி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெளியிடங்களில் இருந்து வரபெற்ற தர்பூசணி விற்பனை ரோட்டோரங்களில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அன்னாசிபழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொருத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் கோடைவெயிலின் தாக்கத்தின்போது தர்பூசணி வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன. இதில், பிப்ரவரி மாதமே தர்பூசணி வரத்து அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் துவங்குவதற்கு முன்பாக கடந்த மாதம் இறுதியிலிருந்து தர்பூசணி வரத்து துவங்கியது. தற்போது மார்க்கெட்டுக்கு தற்பூசணி வரத்து குறைவாக இருந்தாலும். வியாபாரிகள் பலரும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்பூசணியை வாங்கி பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதி ரோட்டோரத்தில் கடையமைத்து விற்பனை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.  குறிப்பாக மீன்கரைரோடு, பாலக்காடுரோடு, வால்பாறைரோடு, பல்லடம்ரோடு, உடுமலைரோடு உள்ளிட்ட  முக்கிய நெடுஞ்சாலையோரம் மற்றும் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் புதிதாக தர்பூசணி  விற்பனை கடைகள் உருவாகியுள்ளன.

வெயிலின் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக தாகம் தணிக்க வாகனங்களில் வருபவர்கள், நடை பயணமாக ெசல்வோர்  தர்பூசணியை வாங்கி செல்கின்றனர். ஒருகிலோ தர்பூசணி ரூ.20வரை விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>