×

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை

ஊட்டி, பிப்.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் 95 சதவீத அரசு நேற்று பஸ்கள் ஓடவில்லை. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பண பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை  வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து  ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிக்கு செல்லவில்லை.

இதனால், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், கிராமப்புறங்களுக்கு  இயக்கப்படும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால், அரசு பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை சில பஸ்களே இயக்கப்பட்டன. மதியத்திற்கு மேல் தற்காலிக பணியாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேசமயம், கர்நாடக மாநில அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இந்த பஸ்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.

Tags : Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...