கக்குச்சி கிராம ஊராட்சிக்கு பரிசு

ஊட்டி, பிப்.26: மாநில அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கேடயம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழக அரசு இந்த பரிசினை வழங்கி வருகிறது. 2013-14ம் ஆண்டு மாநில அளவிலான கூட்டமைப்புகள் சிறந்த கூட்டமைப்பாக ஊட்டி அருகே உள்ள கக்குச்சி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டது. தேர்வான கூட்டமைப்பிற்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த கூட்டமைப்பிற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேடயம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Related Stories:

>