×

கேரட் கழுவும் இயந்திரங்கள் ஆய்வு

ஊட்டி, பிப்.26: கேத்தி பாலாடா பகுதியில் உள்ள கேரட் கழுவும் இயந்திரங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 47 கேரட் கழுவும்  இயந்திரங்கள் உள்ளன. நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி அப்படியே நீர் நிலைகளில் கழிவுகளுடன் வெளியேற்றுகின்றனர். அதனை சரி செய்வதற்காக காலகெடு கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர், 34 நிறுவனங்களில் பில்டரேசன் சிஸ்டம் முடித்து தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

மேலும், 9 நிறுவனங்கள் பில்டரேசன் சிஸ்டம் போன்ற வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது.  பில்டரேசன் சிஸ்டம் முடித்த பின்பு மீண்டும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி