கோடேரியில் புதிய ஆவின் பாலகம் திறப்பு

ஊட்டி, பிப்.26: கோடேரியில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தனியார் விற்பனை முகவர்களால் நடத்தப்பட இருக்கும் புதிய ஆவின் பாலகத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்தார்.பின்னர், அவர் பேசியதாவது: நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மாவட்டத்தில் உள்ள 92 கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினமும் சுமார் 12 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்தும், கோயம்புத்தூர் ஒன்றியத்தில் இருந்து 7400 லிட்டர் நிறை கொழுப்பு பால் கொள்முதல் செய்தும் என சுமார் 17500 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.

மாதத்திற்கு சுமார் 55.60 லட்சம் மதிப்பில் பால் உப பொருட்களான விற்பனை செய்து வருகிறது. இந்த விற்பனையானது மாவட்டத்தில் உள்ள அதிநவீன பாலகங்கள் 3 ஒன்றியத்தால் நடத்தப்படுகிறது. ஒன்று தனியார் விற்பனை முகவர்களால் நடத்தப்படும். 63 சில்லரை விற்பனை முகவர்களால் நடத்தப்படும் பாலகங்கள் என 390 நபர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குன்னூர் - மஞ்சூர் நெடுஞ்சாலையில் கோடேரி என்னும் இடத்தில் ஒன்றியத்திற்கு சொந்தமான தனியார் விற்பனை முகவர்களால் நடத்தப்பட இருக்கும் புதிய பாலகத்தினை திறந்து வைத்து ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிகழ்ச்சியில், ஆவின் பொதுமேலாளர் டாக்டர். ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>