சென்னை: தேர்தல் முடிந்தவுடன் சமையல் எரிவாயு மற்றும் எல்பிஜி விலையை உயர்த்தி மக்களின் முதுகில் குத்தியுள்ளார் பிரதமர் மோடி என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேர்தல் முடிந்தவுடன் ஒன்றிய பாஜக அரசு விலை உயர்வை அறிவித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் போது விலை உயர்த்தப்படாது என மக்களிடம் பொய்களை கூறிய பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை. தேர்தல் முடிந்த உடன் விலையை உயர்த்தி மக்களின் முதுகில் குத்தி துரோகம் செய்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இது வெறும் தொடக்கம் தான் தேர்தல் முடிந்த பிறகு பாஜக அரசு வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தும் என்றும் எச்சரித்துள்ள திருநாவுக்கரசர் மக்கள் இதனை மறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய பாஜக அரசின் மோசமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட பாதிப்பை, மக்கள் மீது திணிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் உணவகங்களை மட்டுமே நம்பியுள்ள மக்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
