வழி தவறி வந்த மக்னா யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

பந்தலூர், பிப்.26: பந்தலூரில் முகாமிட்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். பந்தலூர் அருகே உப்பட்டி புஞ்சவயல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் மக்னா யானை ஒன்று முகாமிட்டது. அதை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை அந்த யானை பந்தலூர் பஜாரை ஒட்டிய பகுதியான மேங்கொரேஞ், அட்டி வயல், கல்லட்டி, செம்மண்வயல், கூவமூலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் அதிகாலை  நுழைந்ததால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பந்தலூர் வனத்துறையினர் சம்பவ விரைந்து சென்று யானையை கண்காணித்தனர். பின்னர், வனக்காப்பாளர் தம்பகுமார் உள்ளிட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள் மக்னா யானையை பின் தொடர்ந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,`பிதர்காடு வனச்சரகம் பகுதியில் இருந்து வழி தவறி வந்த மக்னா யானை, வழித்தடம் தெரியாமல் தடுமாறியது, நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் அசம்பாவிதம் இல்லாமல் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டோம்’ என்றனர்.

Related Stories:

>