அங்கன்வாடி பணியாளர்கள் 4ம் நாளாக காத்திருப்பு போராட்டம்

ஊட்டி, பிப்.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4ம் நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., ஏ.டி.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7வது ஊதிய குழுவில் அரசு ஊழியர்களுக்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4ம் நாளான நேற்றும் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>