×

பவானி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி பெண் பலி

பவானி,பிப்.26:அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம், கே.மேட்டூர், அய்யன்தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சரஸ்வதி (52). இவர் தனது மகன்கள் வீரமுத்து (28), சங்கர் (26), இவரது மனைவி ரசிகா (22), உறவினர் அம்சா (55) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக ஒரு காரில் நேற்று காலை புறப்பட்டனர்.

காரை வீரமுத்து  ஓட்டினார். பவானி - மேட்டூர் ரோட்டில் தொட்டிபாளையம், பனங்காட்டுகாலனி சென்ற போது, எதிரே வந்த வாகனத்தின் மேல் மோதாமலிருக்க இடது பக்கமாக வீரமுத்து காரைத் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கான்கிரீட் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில், சரஸ்வதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர், அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Bavani ,
× RELATED ஈரோடு மாவட்டம் பவானி அருகே நாய்கள் கடித்து 12 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு