×

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூதக்கேணி அங்காளம்மன் கோயில் தெரு பகுதியில் நேற்று காலை முதலை ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வன அலுவலர் சத்தியவேல் தலைமையில், வனப்பிரிவு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 1.5 மீட்டர் நீளமுள்ள இரண்டரை வயது மதிக்கத்தக்க முதலை ஒன்று சிறு காயங்களுடன் படுத்திருந்தது. பின்னர் முதலையை பிடித்து, அதன் வாய்பகுதி மற்றும் உடம்பில் காயம் உள்ளதை அறிந்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சைக்கு பிறகு வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

Tags : Chidambaram ,Boodhakeni Angalaman Temple Street ,Cuddalore district ,Chidambaram Forest Department ,Forest Officer ,Sathyavel… ,
× RELATED மனைவிக்கு 3 பேருடன் கள்ளத்தொடர்பு...