×

ஈரோட்டில் 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு,பிப்.26: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.10லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் 4வது நாளாக அச்சங்கத்தின் மாநில துணை தலைவி மணிமாலை தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 4வது நாள் போராட்டத்தில் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரும்பாலான ஊழியர்கள் அவர்களது குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, பிப். 26:  தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் கடந்த 24ம் தேதி(நேற்று முன்தினம்) முதல் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சங்கத்தின் சார்பில் நேற்று ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில், கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள வருவாய் கிராம உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Erode ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...