×

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

வேலூர், பிப்.26: வேலூர் கலெக்டர் அலுலவகம் எதிரே 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறுகிறபோது பணி கொடையாக ஊழியர்களுக்கு ₹10 லட்சமும் உதவியாளர்களுக்கு ₹5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 22ம் தேதி முதல் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். தொடர்ற்து நேற்று 4வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Tags : Vallur ,
× RELATED வல்லூர் அனல் மின்நிலைய தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்