பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண்ணின் 7 வயது மகள் நேற்றிரவு அங்குள்ள மளிகை கடையில் தயிர் வாங்க சென்றிருக்கிறாள். அப்போது கடையில் இருந்த நபர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அச்சிறுமியின் தாய், மளிகை கடைக்கு சென்று, அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.
இதில், அந்த மளிகை கடையை நடத்தி வரும் கணேஷ் (26) என்பவர், சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, கணேஷை கைது செய்னர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
