புதுச்சேரியை சிறந்த மாநிலமாக்குவோம்: மோடி பேச்சு

புதுச்சேரி,  பிப். 26: காங்கிரஸ் ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பரபரப்பாக பேசியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது: புதுச்சேரியில் தற்போதுதான் பல மேம்பாட்டு திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.  அவை வளர்ச்சிக்கு மகத்தானதாக  இருக்கும். இந்தியா சுயசார்பு திட்டத்தில் புதுச்சேரி முக்கிய பங்காற்றும். புதுச்சேரியிலே நான் மிகப்பெரிய மகிழ்ச்சி, உற்சாகத்தை பார்க்கிறேன். இது காற்று மாறி வீசுவதை காட்டுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் தொடங்கப்பட்ட திட்டங்கள்.

இரண்டாவதாக காங்கிரஸ் அரசிமிடமிருந்து மக்கள் விடுதலை பெற்றது. இதை மக்கள் கொண்டாடி  மகிழ்கிறார்கள். 2016ல் காங்கிரசுக்கு நம்பிக்ைகயோடு மக்கள் வாக்களித்தனர்.  முற்போக்கு திட்டங்களை தரும் என நினைத்தனர். ஆனால் அந்த நம்பிக்கை  நிராசையாகி இருக்கிறது. அவை தகர்ந்துபோய் இருக்கின்றன. மக்களுக்கு  தேவையானவை கிடைக்கவில்லை. அவர்களது அரசு காங்கிரஸ் மேலிடத்துக்கு சேவை  செய்வதாக இருந்தது.

கால் செருப்பை தூக்குவதில் அவர் கவனமாக இருந்தார்.  மக்களை ஏழ்மையில் இருந்து தூக்குவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால் தேஜ  கூட்டணி புதுச்சேரியின் மக்கள் சக்தியால் உந்தப்பட்டதாக இருக்கும் என  உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.காங்கிரஸ் அரசின்  கடமை அனைத்து நிர்வாகத் துறைகளையும் சீரழித்து வருகிறது. பாரம்பரிய  நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு வேலை  செய்வதில்லை விருப்பமில்லை. அது எனக்கு புரிகிறது. மத்திய அரசின் மக்கள்  நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து ஒத்துழைக்கவில்லை. சில  நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் ஒரு வீடியோவை பார்த்தோம். ஒரு ஆதரவற்ற  பெண், முதல்வர் மற்றும் அரசை பற்றி குறை கூறினார். புயல் மற்றும் வெள்ளத்தின்போது  அரசு பாராமுகமாக இருந்தது குறித்து குறிப்பிட்டார். அவரது கண்ணில் வலியை நாம் பார்க்க  முடிந்தது. நாட்டிற்கு உண்மையை கூறுவதற்கு பதிலாக அதை அவர் மாற்றி பொய்  கூறினார். இப்படிப்பட்டவர்களால் மக்களுக்கு ேசவை செய்ய முடியுமா?. காங்கிரஸ்  அடுத்தவர்களை ஜனநாயக விரோதி என்று அழைக்க தவறியதில்லை. அவர்கள் தங்களது  செயல்பாடுகளை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சி தேர்தலை  நடத்த மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் அதை நடத்த உத்தரவிட்டுள்ளது.

ஆனால் காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. இதை மக்கள் தண்டிப்பார்கள். ஜம்மு  காஷ்மீரில் அவை நடத்தப்பட்டன. பெரிய எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்தனர்.  குஜராத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் புதுச்சேரியிலேயே நடத்த  முடியவில்லை. இந்த ஜனநாயக விரோத போக்கை மக்கள் நிச்சயமாக தண்டிப்பார்கள்.காங்கிரஸ்  கட்சியினுடைய கலாச்சாரத்தை நீங்கள் புதுச்சேரியிலேயே கடந்த 5 ஆண்டுகளாக  பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேசிய அளவில் எப்படி செயல்படுகிறார்கள்  என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களை பிரித்து பெய்யை கூறி ஆட்சி செய்ய  வேண்டும் என்பது அவர்களின் கலாச்சாரமாக இருக்கிறது.  ஒரு மாநில மக்கள்  இன்னொரு மக்களுக்கு எதிராகவும், ஒரு சமுதாயத்தை இன்னொரு சமுதாயத்துக்கு  எதிராக தூண்டி அரசியல் செய்கின்றனர். இன்று காங்கிரஸ் தலைவர்கள் வந்து  சொல்கிறார்கள். மீனவர் நலனுக்காக ஒரு அமைச்சகம் அமைப்போம் என்று கூறுகிறார்கள். இது  எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் தனி அமைச்சகத்தை பாஜகதான் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியானது நாடு முழுவதும் மக்களால்  புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சரித்திரத்திலேயே முதன்முதலாக  100க்கும் குறைவான இடங்களை பெற்றுள்ளது. மன்னர் ஆதிக்கம், குடும்ப தலைமுறை  ஆட்சி முறையை கொண்டுள்ளதாக இருக்கிறது. இன்று இந்தியா முற்போக்கு சிந்தனையுடைய ஒரு  நாடாக திகழ்ந்து வருகிறது.நீங்கள் புதுச்சேரிக்கான என்னுடைய தேர்தல்  அறிக்கை. சில வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியும். நான் புதுச்சேரியை  சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். தேஜ கூட்டணி சிறந்த மாநிலமாக மாற்ற  விரும்புகிறது. வர்த்தக மையமாக இருக்கும், கல்விக்கான கேந்திரமாக, ஆன்மீகத்தின் பெரும் மையமாகவும் இருக்கும். சுற்றுலா மையமாக இருக்கும். இதுதான்  புதுச்சேரிக்கான எனது தேர்தல் அறிக்கை. கடந்த காலத்தில் தலைமையின் கைப்பாவையாக இருக்கும் காங்கிரஸ் அரசு  கூட்டுறவுத் துறையை சரியாக நிர்வகிக்கவில்லை. அவற்றில் பல  மூடப்பட்டுள்ளது.முன்னேற்றத்தின் விரோதிகளாக இருக்கிற  காங்கிரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். புதுச்சேரியின் மாண்பை  மீட்டெடுக்க பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.  

Related Stories: