×

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா நிறைவையொட்டி தீர்த்தவாரி

தஞ்சாவூர், மே.1: தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை திருவிழா தேரோட்டம் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

விழாவின் 18ம் நாளான நேற்று பிற்பகலில் சந்திரசேகரர் சுவாமி நான்கு ராஜ வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவகங்கை குளத்தில் அஸ்திரதேவருக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. நேற்று மாலை வெள்ளி, ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கொடி இறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா நிறைவடைந்தது.

 

Tags : Theerthavari ,Chithirai festival ,Thanjavur Big Temple ,Thanjavur ,Swami ,Ambal ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்