×

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர், மே.1: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் தவளவெண்ணகையாள் பாலைவனநாத சுவாமி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு பெண்கள் சீர்வரிசை தட்டு, தாம்புலங்கள் எடுத்து கோயிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள், அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு ஆகமவிதிகள் படி சுவாமி பாலைவன நாதருக்கும் அம்பாள் தவளவெண்ணகையாளுக்கும்
திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் கோயில் செயல் அலுவலர் சிவக்குமார், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், ஆய்வாளர் லெட்சுமி கிராமவாசிகள் மற்றும் சிவப்பேரவை அன்பர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Thirukalyanam ,Thiruppalithurai Palaivananathar Temple ,Thanjavur ,Thirukalyanam ceremony ,Thavalavennakaiyal ,Palaivananathar ,Swamy ,Papanasam taluka ,Thanjavur district ,Ambal ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்