- பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் லட்சார்ச்சனை திருவிழா
- பொன்னமராவதி
- லெட்சர்ச்சனாய் திருவிழா
- பொன்னமராவதி பட்டமரதன் கோவில்
- பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் பூச்சொற்கள் திருவிழா
- பூச்சோர்தல்
பொன்னமராவதி,மே.1: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லெட்சார்ச்சனை விழா நடைபெற்றது. பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா இன்று 1ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோரும் பூச்சொரிதல் விழாவிற்கு முதல் நாள் லெட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று லெட்சார்ச்சனை விழா நடந்தது. தொடக்கமாக பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மற்றும் தமிழாசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் மந்திரம் ஒத லட்சம் முறை அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் லெட்சார்ச்சனை குழுவினர் செய்திருந்தனர். பூஜையை வைரவன் குருக்கள் தலைமையில் செய்திருந்தனர்.
