மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி

தார்: மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை(ஏப்.29) இரவு சரக்கு வேன் ஒன்று 35 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்றது. இது இந்தூர் அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் சிக்லியா கிராசிங் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினி லாரியில் சென்ற 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது.

Related Stories: