×

பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

திருச்சுழி, பிப்.26: திருச்சுழி அருகே புளியங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆர்.சி.பி.டி.எஸ் மற்றும் சி.எம்.சி.ஜெ அமைப்பு சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதிமொழியினை சி.எம்.சி.ஜே அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பால் தாமஸ் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை விழிப்புணர்வு உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பரளச்சி காவல்நிலைய காவலர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது