மாற்றுத் திறனாளிகள் 3வது நாளாக மொட்டையடித்து, நாமம் போட்டு நூதன போராட்டம்

உத்திரமேரூர், பிப்.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3வது நாளான நேற்று, மாற்றுத்திறனாளிகள் மொட்டையடித்து, நாமம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். உத்திரமேரூரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவகம் எதிரே கடந்த 3 நாளாக போராட்டம் நடந்தது. வட்டத் தலைவர் ஏழுமலை தலைமையில் மாற்றுத் திறானாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் நாளில், அமைதியாக போராடிய மாற்றுத்திறனாளிகள் 2ம் நாளான நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று தாலுகா அலுவலகம் எதிரே மொட்டையடித்து, நாமம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பேராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

Related Stories:

>