பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், பிப்.26:பணி வரன்முறை செய்ய வேண்டும், பாதுகாப்பற்ற டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அரசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஸ்ரீஜெயராமன், சிஐடியு மாநில துணைபொதுச் செயலாளர் ராமு, நிர்வாகிகள் அறிவழகன், சிவா, பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஐடியு டாஸ்மாக் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார், காஞ்சிபுரம் மாவட்ட தொமுச டாஸ்மாக் சிறப்புத் தலைவர் சுந்தரவரதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார்,  நிர்வாகிகள் நந்தகோபால், இரணியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், பாதுகாப்பற்ற கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>