தேனி மாவட்ட மை இந்தியா கட்சி அலுவலகம் திறப்பு

தேனி, பிப். 26: மை இந்தியா கட்சியின் தேனி மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று தேனியில் நடந்தது. மாவட்டத்தலைவர் குமரன் தலைமை வகித்தார். கட்சியின் அகில இந்திய தலைவர் அனில்குமார், தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்.நாராயணபிரபு கலந்து கொண்டனர். அலுவலகத்தை தலைவர்கள் திறந்து வைத்தனர். இதனையடுத்து, கட்சியின் தேசியத் தலைவர் அனில்குமார் மற்றும் மாநிலத் தலைவர் ஆர்.நாராயணபிரபு ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதன்பிறகு கட்சியின் தேசிய தலைவர் அனில்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்குப்பதிவு  இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து மீண்டும் வாக்கு சீட்டு முறை வந்தால் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சமாகும். ஜப்பானில் கூட வாக்குச்சீட்டு முறை வந்தபிறகு இந்தியாவில் தயக்கம் காட்டுவது கூடாது என்றார். பேட்டியின்போது, மதுரை மாவட்ட தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் பாண்டீஸ்வரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories: