பயிர் சாகுபடி பயிற்சி

போடி, பிப்.26: போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் மற்றும் கிருஷ்ணா வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி  மாணவிகளுக்கு பயிர் சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது.  வேளாண்மை உதவி இயக்குநர் தெய்வேந்திரன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.     பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து விதைக்கப்பட்ட விழுதுகளில் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டிய பின் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் அசுவினி, இலை துளைப்பான், காய் துளைப்பான் போன்ற நோய்களை கட்டுப்படுத்தலாம். மாணவிகள் சுமா, ஐஸ்வர்யா, நாக சிவபாரதி, பத்மலோஷினி, ஜான்சி, திவ்ய பவதாரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: