நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, பிப்.26: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் பிப்.27ல் சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.27ல் காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் கோர்ஸ் முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.வேலை நாடுநர்கள் பயோடேட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.

www.tnprivatejobs.tn.gov.in என்ற தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாம் குறித்த தகவல்களை 04575-240435 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை, இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவு, சுய வேலைவாய்ப்புக்கான வங்கிக் கடன்கள் பற்றிய ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்படும். பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>