காலமுறை ஊதியம் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கை, பிப்.26: டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வருகிற ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்பான பணி நிலைமையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிஐடியு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வீரய்யா, தொமுச மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ராஜ்மோகன், பணியாளர் சங்கம் சார்பில் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மலைராஜ், முருகேசன் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>