×

மேலூர் தும்பைபட்டியில் பிரதோஷ வழிபாடு

மேலூர், ஏப். 30: மேலூர் அருகே தும்பைபட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி, நந்தியம் பெருமாள் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 

Tags : Thumbaipatti, Melur ,month ,Gomathi Ambigai Sametha Shankaralingam Swamy Temple ,Thumbaipatti Sivalayapuram ,Melur ,Shankaralingam Swamy ,Nandhiyam Perumal ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு