மதுரை, ஏப். 30: மே தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு நாளை (மே 1) மதுரை மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், தமிழ்நாடு சுற்றுலா துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.
நாளை மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, நாளை மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது. அதை மீறி மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
