×

மாவட்ட கால்பந்து அணி தேர்வு

திண்டுக்கல், ஏப்.30: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து அணிக்கான தேர்வு நாளை மறுநாள் (மே 2ம் தேதி) நடைபெறுகிறது என மாவட்ட செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மாநில அளவிலான கால்பந்து போட்டி, காயல்பட்டினத்தில் மே 13ம் தேதி முதல் மே 27ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ளும் திண்டுக்கல் அணிக்கான தேர்வு மே 2ம் தேதி மற்றும் மே 3ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே 5ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆகையால் இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Tags : football ,Dindigul ,District Secretary ,Shanmugam ,Dindigul district football team ,Kayalpattinam ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா