×

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

கோபால்பட்டி, ஏப்.30: சாணார்பட்டி அருகே முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். சாணார்பட்டி அருகே உள்ள சட்டக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பீட்டர் (93). முன்னாள் ராணுவ வீரர். சட்டகாரன் பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.

இதனையறிந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி இறங்கி சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Gopalpatti ,Chanarpatti ,Peter ,Sattakaranpatti ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா