×

பழநி அருகே வயலில் தீ விபத்து: நெற்பயிர்கள் எரிந்து நாசம்

பழநி, ஏப்.30: பழநி அருகே ஆயக்குடி நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஏக்கர் நெற்பயிர்கள் எரிந்து நாசமாயின. பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் முத்து. விவசாயியான இவருக்கு, புது ஆயக்குடி கொய்யாவாரியில் சுமார் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெற்பயிர்கள் நடவு செய்திருந்தார். நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் இவரது வயலிற்கு அருகில் உள்ள ரமேஷ் என்பவரது வயலில் நெல் அறுவடை முடிந்திருந்தது. கோடை உழவு செய்வதற்காக தனது வயலிற்கு தீ வைத்துள்ளார். அந்த தீ எதிர்பாராதவிதமாக முத்துவின் வயிலில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களின் மீது பரவியது. இதில் சுமார் 2 ஏக்கர் நெற்பயிர்கள் தீ கருகி சாம்பலாகின. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palani ,Ayakudi ,Muthu ,Koiyavari, Pudu Ayakudi… ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா