- கீழவச்சத்தூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- தஞ்சாவூர்
- தீ மிதி திருவிழா
- ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்
- வெள்ளாளர் தெரு, கீழவச்சத்தூர்
- சரபோஜிராஜபுரம்
- பாபநாசம்
- திரௌபதி அம்மன்
தஞ்சாவூர், ஏப்.30: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கீழவழுத்தூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு பூஜைகள் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அழகுகாவடி எடுத்தும், பக்தர்கள் தீ மிதித்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர், திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கீழவழுத்தூர் வெள்ளாளர் தெரு கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர்.
