×

வேதாரண்யத்தில் இன்று உப்பு அள்ளும் நிகழ்ச்சி

வேதாரண்யம், ஏப். 30: உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவினர் வேதாரண்யம் வந்தடைந்தனர். இன்று அகஸ்தியன் பள்ளி உப்பு சத்தியாகிரக ஸ்தூபி அருகே தியாகிகள் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளுகின்றனர். 96 ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக யாத்திரை குழுவினர் திருச்சியிலிருந்து புறப்பட்டு வேதாரண்யம் வந்து அடைந்தனர். இன்று வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் உபவாசம் மேற்கொண்டனர்.

ஆங்கிலேயர்கள் ஒப்புக்கு விதித்த வரியை எதிர்த்து மகாத்மா காந்தி குஜராத் மாநிலம் தண்டியில் யாத்திரை நடத்தினார். அதே நாளில் திருச்சியில் இருந்து ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் வரை யாத்திரை சென்று உப்பு அள்ளும் போராட்டத்தை சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரத்தனம் முன்னிலையில் மேற்கொண்டனர். ஆங்கில ஆட்சி எதிர்த்து ஏப்ரல் 13ம் தேதி திருச்சியிலிருந்து தொடங்கி 30ம் தேதி வேதாரண்யம் வந்தடைந்து பின்னர் உப்பு அள்ளிய நிகழ்ச்சி ஆண்டுதோறும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் உப்பு சத்தியாகிரகம் யாத்திரை திருச்சியில் இருந்து தொடங்கி வேதாரண்யம் வந்து அடைந்தது பின்பு உபவாசம் மேற்கொண்ட குழுவினருக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கைலமணி வேதரத்தினம், ஐஎன்டிஎஸ்சி துணை தலைவர் தங்கமணி, தொகுதி பொறுப்பாளர் போஸ் நகரத் தலைவர் அர்ஜுனன், வட்டார தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்து உபவாசத்தை முடித்து வைக்கின்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து உப்பு சத்தியாகிரக போராட்ட யாத்திரை பிரிவினர் புறப்பட்டு உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்கின்றனர். பின்பு பேரணியும் பொது கூட்டமும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது

 

Tags : Salt ,Vedaranyam ,Salt Satyagraha Yatra ,Congress ,Agasthyan School ,Salt Satyagraha Stupa ,Trichy… ,
× RELATED குலசை கோயில் வருஷாபிஷேக விழா