காசநோய் தடுப்பு விழா

மதுரை, பிப்.26: மதுரை கல்லூரியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் தடுப்பு வார விழா அனுசரிக்கப்பட்டது. துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் ஹசன் முகம்மது கான் தலைமை வகித்தார். விழாவில் காசநோயின் அறிகுறிகள், பரவும் முறை மற்றும் சிகிச்சை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளர்கள் திரவியம்பிள்ளை, காசநோய் அலகு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: