சேடபட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

பேரையூர், பிப்.26: பேரையூர் தாலுகா சேடபட்டியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சேடபட்டி யூனியன் அலுவலகம் எதிரில் பேரையூர்-உசிலம்பட்டி சாலையில் நடந்த மறியலுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முத்துகாந்தாரி தலைமை வகித்தார். சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் திருக்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுடையவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமும், தனியார்துறையில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 50 மாற்றுத்திறனாளிகளை சேடபட்டி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: