பச்சை காளியம்மன் திருவிழா

சோழவந்தான், பிப்.26: சோழவந்தான் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே உள்ள பச்சை காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 16ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது.விழாவில் 23ம் தேதி சக்தி கரகத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவுறுகிறது. விழா ஏற்பாடுகளை பசும்பொன் நகர் கிராமத்தினர் செய்திருந்தனர்.சோழவந்தான் பேட்டை வீரகாளியம்மன் கோயில் மாசித் திருவிழா நடைபெற்றது. கடந்த 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவில் 22ம் தேதி திருவிளக்கு பூஜை, 23ம் தேதி அக்னிச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: