ரதயாத்திரைக்கு அனுமதி மறுப்பு போலீஸ் கமிஷனர் ஆஜராக உத்தரவு

மதுரை, பிப்.26: ரதயாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக ெபாது மக்களிடம் இருந்து பொருளுதவி பெறுவதற்காக ரத யாத்திரை நடத்தவுள்ளோம். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ரதயாத்திரை செல்ல ஒலி பெருக்கி அனுமதி வழங்க போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால், நீதிமன்றம் அனுமதித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, ரதயாத்திரை வாகனத்தை போலீசார் விடுவிக்க வேண்டும். மதுரை போலீஸ் கமிஷனர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: