பெண்கள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருவெறும்பூர், பிப்.25: திருவெறும்பூர் அருகே உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலைய ஊழியர்கள் மாநில பெண்கள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் தலைமை இயக்குனர் முரளிதரன் அறிவுறுத்தலின்படி இணை இயக்குனர் காஜாமுகைதீன் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்புதின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சி நிலையத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories:

>