திருவாரூரில் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

திருவாரூர், பிப்.25: திருவாரூர் கொடிக்கால் பாளையத்தில் வசித்து வந்தவர் அசரப்அலி(55). இவர் நேற்று முன்தினம் தனது சொந்த வேலையாக திருவாரூர் பழைய தஞ்சை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராவிதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே அசரப்அலி பலியானார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தை சேர்ந்த தேவராஜன்(31) என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>