அரியலூர், தா.பழூரில் தேர்தல் பிரசார பாடலுடன் திமுகவினர் சைக்கிள் பேரணி

அரியலூர், பிப்.25: அரியலூர் நகரில் மாலை 5 மணியளவில் அண்ணா சிலையில் ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு என்ற தேர்தல் பிரசாரப் பாடலை பொது மக்களிடத்தில் கொண்டு செல்லும் வகையில் சைக்கிள் பேரணி தொடங்கி கடைவீதி, தேரடி, சத்திரம், மாதா கோயில் தெரு, சின்னக்கடை வீதி, மார்க்கெட் தெரு, ராஜாஜி நகர், காலேஜ் ரோடு, மாங்காய் பிள்ளையார் கோயில் தெருவழியாக வந்து தொடங்கிய இடத்தில் நிறைவு பெற்றது. இதில் நகர செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, துணை அமைப்பாளர் லூயிகதிரவன், நகர நிர்வாகிகள், வக்கீல்கள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சக்திவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நடந்த சைக்கிள் பேரணி சிலால் கிராமத்தில் இருந்து துவங்கி அணைக்குடம், கோடங்குடி, சிந்தாமணி வழியாக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் ச 7 கி.மீ. தூரம் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சைக்கிள் மற்றும் டூவீலர்களில் பேரணியாக வந்தனர். பேரணி தா.பழூர் முக்கிய வீதிகளில் வலம் வந்து கட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

Related Stories:

>