பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பெரம்பலூர்,பிப்.25: பெரம்பலூர் மாவட்ட அதி முக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாகக் கொண் டாடப் பட்டது. இதனையொ ட்டி பெரம்பலூர் புதுபஸ்டா ண்டு வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவ சிலை க்கு அதிமுக மாவட்ட செய லாளரும், குன்னம் தொகு தி எம்எல்ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் மாலை அ ணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் எம்எ ல்ஏ தமிழ்ச்செல்வன் முன் னிலை வகித்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளையொட்டி நேற்று பிறந்த 7 பெண் குழ ந்தைகளுக்கு தலா 1கிராம் தங்க மோதிரம்அணிவிக்க ப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலாளர்கள் கர்ணன், செல்வக்குமார், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், குரும்பலூர் பேரூர்செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் ஜெயலலிதா பிற ந்தநாளையொட்டி நேற்று பிறந்த 2 பெண் குழந்தை களுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக் கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநா யகர் வரகூர்அருணாசலம், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் ராஜாராம்,முன் னாள் எம்எல்ஏ பூவைசெழி யன், மாவட்ட அவைத்தலை வர் துரை உட்படபலர் கலந் து கொண்டனர்.

Related Stories:

>