ரூ.3,000 உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் முயற்சி

வேதாரண்யம், பிப். 25: மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்க வேண்டும். 2016ம் ஆண்டு சட்டப்படி தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் வடக்கு வீதியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். சங்க தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார். இந்த தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தை தடுத்தனர். இதனால் சாலையோரம் நின்று 2 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை: அனைத்து தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நாகை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  அப்போது அவர்களை தடுத்து நிறுத்தியதால்  அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: