×

பழநி அருகே பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து

பழநி, ஏப். 29: பழநி அருகே மானூரை சேர்ந்தவர் சங்கிலித்துரை. இவரது வீட்டில் உள்ள பிரிட்ஜ் மின்னழுத்த மாறுபாட்டின் காரணமாக திடீரென வெடித்து தீப்பற்றி எரிய துவங்கியது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இதுகுறித்து பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Palani ,Manur ,Palani Fire Department ,
× RELATED ராமேஸ்வரத்தில் பரபரப்பு பற்றி எரிந்தது படகு