×

கந்தர்வகோட்டையில் குறுகலாக உள்ள கிராடார் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, ஏப்.29: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் ஆஞ்சநேயர் ஆலய தாழை வாரி தஞ்சை – மதுரை தேசிய நெடுச்சாலையில் உள்ள கிராடார் பாலத்தை தார்ரோட்டில் அகலத்திற்கு ஏற்ப விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

226 தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தில் உள்ள தரைவழி பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. கன்னியாகுமரி முதல் வேளாங்கண்ணி வரை இந்த சாலையை சிறு ரக வாகன ஓட்டிகளும், கனரக வாகன ஓட்டிகளும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகமாக வரும் வாகனம் பாலத்தில் அளவினால் சாலை குறுகியதால் பாலத்தில் மோதி பெரும் விபத்து பலமுறை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த கிராடார் பாலத்தை ஒன்றிய அரசு தனிக்கவனம் எடுத்து உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர். சமீப காலமாகவே இங்கு அதிக அளவில் விபத்து நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Gadaar Bridge ,Gandarfakottai ,Gadarfakottai ,Thanjavur-Madurai National Highway ,Anjaneyar Temple ,Gadarfakottai panchayat ,Pudukkottai district ,226 National… ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்