கரூர் கோவை சாலையில் உரமிடும் பணியில் விவசாயிகள்

கரூர், பிப்.25:கரூர் கோவை சாலையில் 80 அடி சாலை பிரிவில் நடைபெறும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை கோவை சாலை உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு பகுதிகளுக்கான சாலைகள் பிரிகிறது. இதில், 80 அடி சாலை பிரியும் இடத்தில் கரூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்களும், இதே போல இந்த பகுதியில் இருந்து கரூர் கோவை சாலை, வையாபுரி நகர் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் அதிகளவு வாகனங்களில் சென்று வருகின்றனர். அதிகளவு வாகன போக்குவரத்து காரணமாக 80 அடி சாலை பிரிவில் அவ்வப்போது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலைப்பிரிவில் நிகழும் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து நிரந்தரமாக தீர்வு காண தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>