- பொறையாறு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- தரங்கம்பாடி
- திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம்
- அக்னி வசந்தம் திருவிழா
- திரௌபதி அம்மன் கோவில்
- பொராயரு
தரங்கம்பாடி, ஏப்.29: மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொறையாரில் உள்ள திரவுபதியம்மன் கோயில் அக்கினி வசந்தம் பெருவிழா கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
விழாவில் துரியோ தனன் படுகளமும், திரவுபதி அம்மன் கூந்தல் முடி த்தலும் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டுயிருந்த தீக்குண்டத்தில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
