- பேராவூர் காமாட்சி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- கூத்தலம்
- காமாட்சி அம்மன் கோயில்
- பெரவூர்
- மயிலாதுதுரை மாவட்டம்
- சித்திராய் திருவிழா
- தீமிதி திருவிழா…
குத்தாலம், ஏப்.29: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பேராவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் பலரின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.
காப்பு கட்டி விரதமிருந்து ஏராளமான பக்தர்கள் பேராவூர் வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர். முன்னதாக காமாட்சி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு ஆலயம் முன்பு எழுந்தருளினார். பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
