80 அடி சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் அவதி நேருயுவகேந்திராவில் பகுதி நேரமாக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், பிப். 25: கரூர் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பிரிஜேஸ் கவுசிக் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நேரு யுவகேந்திராவில் பகுதி நேரமாக பணியாற்ற ஆர்வமுடையவர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18வயது முதல் 29வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த வாய்ப்பை பெற்று பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பணியின் பெயர் தேசிய இளைஞர் படைத் தொண்டர், பணியின் காலம் 2 ஆண்டுகள் மட்டும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 5ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில செலுத்தப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் வசிக்க வேண்டும். டிகிரி மற்றும் கணினித் திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமூதாய நலனில் அக்கறை உள்ளவர்களாகவும், இரண்டு ஆண்டுகள் சமுக மேம்பாட்டு பணிகளால் அனுபவம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். சமூதாய மேம்பாட்டு பணிகளான கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், இளைஞர், பெண்கள் மேம்பாட்டு போன்றவைகளை சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் அரசின் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து இளைஞர், மகளிர் நற்பணி மன்றங்ளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 25ம்தேதி மாலை 5மணி வரை அவகாசம் உள்ளது. மேலும், விபரங்களுக்கு தாந்தோணிமலையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: